×

சாலை பணியாளர்கள், ஆய்வாளர்கள் எதிர்ப்பையும் மீறி தனியார் நிறுவனத்திடம் 321 கோடி நிதி சாலை பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு

* தமிழக அரசு உத்தரவு
* வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை:  தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளரின் தலைமையில் 41 கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் சாலை புதுப்பிப்பது மற்றும் பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர். தற்போது இந்த கோட்டங்களின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2013-14ல் பொள்ளாச்சி கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை பணிகள் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2015-16ல் கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர் கோட்டங்களிலும், 20171-8ல் விருதுநகர் கோட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

1564 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகளும், 1382 கி.மீ நீள மாவட்ட முக்கிய சாலைகளும் தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பழனிகோட்டத்தில் உள்ள 205 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகளிலும், 302 கி.மீ நீள மாவட்ட முக்கிய சாலைகளிலும் 688 கோடியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு பணிகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது இப்பணிக்காக 321.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிறுவனம் 5 ஆண்டுகள் சாலை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வரும் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் வேறொரு கோட்டங்களில் பணி அமர்த்தப்படவுள்ளனரா அல்லது அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  தொடர்ந்து சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று சாலை பணியாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தஞ்சாவூர் சாலையை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : company ,road workers ,inspectors ,analysts , Road Staff, Inspectors, Financial Road p
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...