×

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டோம் தேர்தலில் இனி மஜத தனித்தே போட்டி : தேவகவுடா அதிரடி அறிவிப்பு

பெங்களூரு: கடந்த காலங்களில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மஜத தவறு செய்துவிட்டது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதுடன் எதிர்வரும் காலங்களில் அனைத்து தேர்தலிலும் மஜத தனித்தே போட்டியிடும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறினார். பெங்களூருவில் உள்ள மஜத அலுவலகத்தில் குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களை சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் தேவகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்: இன்று முதல் 20 நாட்களுக்கு நாள்தோறும் தலா 2 அல்லது 3 மாவட்டங்களை சேர்ந்த மஜத நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்வரும் காலங்களில் நடக்க உள்ள தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இங்கு மட்டும் இன்றி வரும் 18ம் தேதி ரெய்ச்சூர், யாதகிரி, கலபுர்கி, உடுப்பி மாவட்டங்களிலும், செப்டம்பர் 19ம் தேதி விஜயபுரா, பாகல்கோட்டை, தென்கனரா, பெலகாவி, சிக்கோடி மாவட்டங்களிலும், 20ம் தேதி ஹுப்பள்ளி-தார்வாட், ஹாவேரி, கதக் மற்றும் வட கர்நாடகா மாவட்டங்களிலும் கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் குறித்து மஜத நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம். கூட்டணி தர்மம் குறித்து சில கட்சிகளை சேர்ந்தவர்கள் பல வகையான கருத்துக்களை கூறி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை ேதர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை செய்து விட்டோம். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதில் மிகவும் கவனமாக செயல்படுவோம்.
எனவே, இனி எதிர்காலத்தில் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களிலும் வெற்றியோ தோல்வியோ எதை பற்றியும் கவலைப்படாமல் தனித்தே போட்டியிடுவோம் என்றார்.

ஒரு வாரத்தில் யு டர்ன்  

கடந்த வாரம் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்; கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ெதாடரும். ஆனால், கூட்டணி குறித்து கர்நாடகாவை சேர்ந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்ைத நடத்தமாட்டேன். தேவையென்றால் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர் சோனியாகாந்தியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார். ஆனால், தற்போது முதல்வர் பதவி மற்றும் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமார் சிறைக்கு சென்றுள்ள விவகாரம் இரு கட்சிகள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருவதால் தேவகவுடா இனி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறி ஒரே வாரத்தில் யு டர்ன் அடித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது. 


Tags : Alliance ,Congress , Alliance , Congress wins wrong
× RELATED இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம்...