×

பிரதமர் மோடி பிறந்த நாள் 1,200 கிலோ மீட்டர் பைக் பேரணி : விஜய் கோயல் தொடங்கி வைத்தார்

புதுடெல்லி  : பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் இருந்து  அவரது பிறந்த நகரான வடநகருக்கு மோட்டார் சைக்கிள் பேரணியை பாஜ எம்பி விஜய்  கோயல்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி குஜராத் மாநிலம் வடநகரில்  பிறந்தார்.  அவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின்  பிறந்த நாளை பாஜ கட்சியினர்  சேவ்சட்பாத் (சேவை வாரமாக)  அனுசரிக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் இருந்து வட நகருக்கு பைக் பேரணி  செல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பேரணியை  டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ எம்பியுமான விஜய் கோயல் கொடி  அசைத்து நேற்று தொங்கி வைத்தார்.
 
பிரதமரின் தூய்மை இந்தியா, ஒரு முறை  உபயோகத்துக்குப் பிறகு தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை  குறைத்தல் போன்ற  நடவடிக்ைக குறித்த விழிப்புணர்வு இந்த பேரணியின் போது ஏற்படுத்தப்படும்.   இந்த பேரணி நான்கு மாநிலங்கள் வழியாக வட நகரை வரும் 20ம் தேதி சென்றடையும்.  பேரணியின் மொத்த தூரம் 1,200 கிலோ மீட்டராகும். இந்த பேரணியில்  பங்கேற்கும் ராய் லட்சுமி, அவருடன் செல்லும் இரு சக்கர வாகனயோட்டிகளை கோயல்  பாராட்டினார். இந்த பேரணி விஜய் கோயலின் அசோக சாலை இல்லத்தில் இருந்து  தொடங்கியது.


Tags : Modi ,Vijay Goyal ,Birthday ,Bike Rally ,Birthday Celebrations , Prime Minister Modi's ,Birthday Celebrates, 1,200km Bike Rally: Vijay Goyal
× RELATED இந்துத்துவா சித்தாந்த வீரரான வீர...