×

தீ மிதி திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் விழுந்த பக்தர்

சென்னை: கோயில் திருவிழாவில் 2வயது குழந்தையுடன் தீ மிதிக்கும் போது கால் தவறி நெருப்பில் பக்தர் கீழே விழுந்தார். இதில் லேசான காயங்களுடன் அவரும் குழந்தையும் உயிர் தப்பியது. சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் கோயில் உள்ளது. அப்பகுதியல் சக்தி வாய்ந்த கோயில் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கோயிலில் தீ மிதி திருவிழா நடந்தது. அதில் வேண்டுதலின் படி பலர் தீயை மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிவர்த்தி ெசய்தனர். அப்போது சூளைமேடு அபிட் நகரை சேர்ந்த கணேசன்(37) என்பவர் தனது சகோதரரின் 2வயது மகன் பரணியை கையில் தூக்கி கொண்டு தீயில் இறங்கி சென்றார். அதில் எதிர்பாராத விதமாக கணேசன் கால் தவறி தீ யிலேயே விழுந்தார்.

 இதில் 2வயது குழந்தையும் நெருப்பில் விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தை மற்றும் கணேசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நல்வாய்ப்பாக குழந்தைக்கு 5 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிர் தப்பியது. கணேசனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இருவரும் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சூளைமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : devotee ,fire pedestal , Fire pedestrian, child, devotee
× RELATED பக்தர்களை காக்கும் பக்த அனுமன்