×

கடைமடைக்கு காவிரி நீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை ஆபீசை முற்றுகையிட்டவர்கள் கைது

திருச்சி: கடைமடைக்கு காவிரிநீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.மேட்டூரிலிருந்து கடந்த மாதம் 13ம் தேதியும், கல்லணையிலிருந்து 17ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதேசமயம் கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து  வீணானது. இதையடுத்து கடை மடைக்கு வராமல், காவிரிநீரை கடலுக்கு திருப்பி விட்ட எடப்பாடி அரசை கண்டித்தும், தூர் வாருவதில் கொள்ளையை கண்டித்தும் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை மண்டல பொறியாளர்  அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று முற்றுகையிட வந்தனர்.

அப்போது அவர்களை, கன்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், ெதாடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதால் 2 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஆயுதப்படை மைதானத்தில்  உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : office ,Cauvery , Cauvery water , condemned,works, office
× RELATED மாற்றுத்திறனாளிகள் 31ம் தேதி வரை: அரசு ஆபிசுக்கு செல்ல வேண்டாம்