×

லேண்டரை நாளை நாசாவின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பும் என நம்பிக்கை: புகைப்படத்தின் மூலம் விக்ரம் லேண்டரின் நிலை தெரியவரும்...!

டெல்லி: சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் நாளை புகைப்படம் எடுக்க உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கலனை கடந்த 7ம் தேதி நிலவில் தரை இறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நிலவின்  மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது விக்ரம் லேண்டர் கலனில் இருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால், விஞ்ஞானிகளுக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி தரை இறக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.

விக்ரம் லேண்டர் கலன் திடீரென மாயமானதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், நிலவின்  மேற்பரப்பில் அது எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் நாசாவும் களம் இறங்கியுள்ளது. நாசாவின் விண்வெளி தொடர்பு  தரைகட்டுப்பாட்டு(டிஎஸ்என்) மையங்கள் அமெரிக்காவின்  கலிபோர்னியா, ஸ்பெயினின் மேட்ரிட், ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா ஆகிய 3 நகரங்களில் உள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் 4 சக்தி வாய்ந்த ஆன்டனாக்கள் உள்ளன.

26 மீட்டர் உயரம், 70 மீட்டர் விட்டம் கொண்ட இந்த ஆன்டனாக்களில்  இருந்து விண்வெளியில் இருக்கும் பல செயற்கைகோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு ரேடியோ அலைகள் மூலம் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியும். இந்த முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாசா கடந்த 2009-ம் ஆண்டு  ஆர்பிட்டர் நாளை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை கடக்க உள்ளதாகவும், அப்போது அதை புகைப்படம் எடுக்கும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : NASA ,lander ,Vikram Lander , Vikram Lander, NASA's Orbiter, photo
× RELATED ‘ஒடிஸியஸ்’ தனியார் விண்கலம் நிலவில்...