சேலம் மார்க்கெட்டில் கிலோ ரூ.10க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் வீசப்பட்ட சாமந்தி பூக்கள்

சேலம்: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, ஓமலூர், கன்னங்குறிச்சி, மன்னார்பாளையம், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பூ வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழையால், சாமந்தி பூவை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து செய்தனர். இதனால் விளைச்சல் அதிகரித்தது. இந்த பூக்களை, சேலம் வஊசி பூ மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை முகூர்த்தம் என தொடர்ந்து வந்த நிகழ்ச்சிகளால் பூக்கள் விலை உச்சத்தை தொட்டது.வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், சாமந்தி பூ கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், அதிகரித்து காணப்பட்ட இந்த பூ விலை, தற்போது கிலோ ரூ.30 க்கு விற்பனையாகிறது. இதையும் வாங்க ஆளில்லாததால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் கிலோ ₹10க்கு கூட சாமந்தியை வழங்குகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால், சாமந்தி பூவை இருப்பு வைத்து விற்க முடியாமல் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளது. இதனால், அழகிய நிலையில் உள்ள சாமந்தி பூவை வஊசி மார்க்கெட் பின்புறத்தில் குப்பையில் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், பெய்து வரும் தொடர் மழையால், சாமந்தி பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பூ அழுகி விடுகிறது. எனவே இந்த பூவை குப்பையில் கொட்டி விடுகிறோம், என்றனர்.

Tags : Salem Sale ,Salem , Salem, marigold flowers
× RELATED டி.என்.பி.எஸ்.சி. அரசு பணித்தேர்வு...