×

திருவாரூரில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தை ரத்து செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: திருவாரூரில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புதிய கல்விக்கொள்கை பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்து மாணவர்கள்களின் கல்வித்திறன் வளரும் என கூறி இத்திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் அருகே உள்ள திரு.வி.க. அரசு கலை கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய கல்விக்கொள்கை திட்டத்தில் அமல்படுத்தப்படும் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். மேலும் இந்த திட்டத்தினால் மாணவர்களின் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்தப்படும் என்ற அபாயம் உள்ளதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி இன்று திடீரென திருவாரூர் அருகே உள்ள திரு.வி.க. அரசு கலை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக வகுப்புகள் அனைத்தும் புறக்கணித்து செல்வதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். உடனடியாக இந்த புதிய கல்விக்கொள்கை திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யவில்லை என்றால் இதைவிட மாபெரும் போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.


Tags : Thiruvarur , New Education Policy, Thiruvarur, Cancellation, Doctrine, Students, Demonstration
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்