×

ரயில் நிலையங்கள், கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ்-இ-முகமது மிரட்டல் கடிதம்: பாதுகாப்பு அதிகரிப்பு

ரோடாக்: இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அடுத்த மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை அதனைத் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை ஆகியவை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை காலங்களில் பல்லாயிரக்கணக்கான இந்து மக்கள் திரளும் இடங்களில் தாக்குதல் நடத்தவிருப்பதாக ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தளங்களில் குண்டு வெடிக்கும் என்ற எச்சரிக்கையால் 6 மாநிலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, பெங்களூரு, போபால், இட்டார்சி, குருஷேத்ரா உள்ளிட்ட 11 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியாணாவின் ரோடாக், உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 6 மாநிலங்கள் தீரிவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்கள் மற்றும் கோயில்களில் அக்டோபர் 8ம் தேதி வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக ஜெய்ஷ்-இ-முகமது மிரட்டல் விடுத்துள்ளது. செப்டம்பர் 14ம் தேதியன்று கராச்சியை சேர்ந்த மசூத் அகமது என்ற தீவிரயாதியின் பெயரால் மிரட்டல் கடிதம் ஒன்று ரோட்டக் ரயில்நிலைய அதிகாரி யாஷ்பால் மீனாவுக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதத்தை அடுத்து ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ரோடாக் நகர இணை ஆய்வாளர் நரேந்திர சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



Tags : railway stations ,bombing ,Jaish-e-Mohammed ,temples , Railway Station, Temple, Bomb Attack, Jaish-e-Mohammed, threatening letter
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...