×

கேரளாவில் 350 குடும்பங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்: மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் உத்தரவை எதிர்த்து உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. கொச்சி அருகே விதிமுறைகளை மீறி 5 கட்டிடங்களில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவின் படி இந்த கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்தது. வீடுகளை காலி செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது.

ஆனால் வீடுகளை விட்டு வெளியேற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. முறைப்படி வரிகள் அனைத்தையும் செலுத்தி வாங்கப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவது நியாயம் இல்லை என்று வீட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு வாசிகளை சந்தித்த பின் பேசிய கேரள எதிர்கட்சி தலைவர் அனைத்து தரப்பினர் கருத்தை கேட்க்காமலே உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இதனிடையே கட்டிட பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கேரளா அரசு நாளை அழைப்பு விடுத்துள்ளது. வீடுகளை  இடிக்க விதிக்கப்பட்ட கேடு வரும் 20-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் குடியிருப்பு வாசிகளின் மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Tags : families ,Kerala ,hunger strike , Kerala, fasting, apartments, protest
× RELATED கொடைக்கானலில் 22 ஆண்டுக்குப் பிறகு...