×

பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்

சென்னை. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினிபஸ் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, டி.எம்.எஸ், நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினிபஸ் சேவை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கி.மீ தூரம் வரை இந்த சேவை தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்காக 10 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் கூடுதலாக 20 மினி பஸ் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஏற்கனவே 6 நிலையங்களில் 12 மினி பஸ் சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் பெங்களூரில் இருந்து கூடுதலாக 20 மினிபஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நிலையத்திற்கு 2 வாகனங்கள் வீதம் 10 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்த சேவை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு மொபைல் ஆப் மற்றும் பயண அட்டை மூலம் கட்டணத்தை செலுத்தலாம். தற்போதுள்ள வரவேற்பை பொறுத்து மீதம் உள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தப்படும். எந்ததெந்த நிலையங்களில் தொடங்கலாம் என்பது குறித்து எதுவும் திட்டமிடப்படவில்லை.இவ்வாறு கூறினார்.

Tags : stations , Metro Rail, in addition, 20 mini bus, service
× RELATED பதற்றமான வாக்குசாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு