×

ஆட்டோ திருடுபோனதால் டிரைவர் தற்கொலை

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் கார்டன் மண்டபம் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் (38), சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் சவாரியை முடித்துவிட்டு அயனாவரம் தண்ணீர் தொட்டி அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்து திரும்பி வந்தபோது ஆட்டோ திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோ திருடுபோனதால் விரக்தியில் இருந்த டிரைவர் ராஜேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இறந்த ராஜேசுக்கு மனைவி, குழந்தை உள்ளனர். இதுகுறித்து டி.பி. சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Auto, stealing, driver, suicide
× RELATED நிலத்தகராறில் லாரி டிரைவர் தற்கொலை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்