×

இந்தாண்டில் இதுவரை பாக். தாக்குதலில் 21 இந்தியர்கள் பலி

புதுடெல்லி: மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படைகளால் நடத்தப்படும் அத்துமீறிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், எல்லைதாண்டிய தீவிரவாத ஊடுருவல்களுக்கு ஆதரவு தரும் சம்பவங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் மற்றும் எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து தாக்குதல் உள்ளிட்டவை குறித்து பாகிஸ்தானிடம்  இந்தியா கவலை தெரிவித்து

வருகிறது. இந்த ஆண்டு எல்லையில் அத்துமீறி 2,050 முறை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில், 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்தியா மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை அழைத்து 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கும்படி கூறி வருகிறது. மேலும், சர்வதேச எல்லை அருகே அமைதியையும், இணக்கமான சூழலையும் அந்நாடு பாதுகாக்க வேண்டும். இந்திய படைகள் அதிகபட்ச கட்டுப்பாடோடு செயல்படுகின்றன என்றார்.


Tags : Bach ,attack ,Indians , This year, Bach. Attack, 21 Indians, killed
× RELATED 3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்