×

கடுமையான எச்சரிக்கை விடுத்தும் டெல்லி அரசு இல்லத்தை காலி செய்யாத 82 மாஜி எம்பி.க்கள்: ஆக்கிரமிப்பாளர் சட்டத்தில் நடவடிக்கை

புதுடெல்லி: மக்களவை குழு கடுமையான எச்சரிக்கை விடுத்தும், முன்னாள் எம்பி.க்கள் 82 பேர், டெல்லியில் வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்யாமல் உள்ளனர். இவர்கள் மீது சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. டெல்லி லுத்யன்ஸ் பகுதியில் எம்பி.க்களுக்கான அரசு இல்லங்கள் உள்ளன. முந்தைய மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் முன்னாள் எம்பி.க்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. கடந்த மே 25ம் தேதி 16வது மக்களவை கலைக்கப்பட்டு விட்டது.

ஆனாலும், கடந்த மாதம் வரை 200 மாஜி எம்.பி.க்கள் அரசு இல்லங்களை காலி செய்யாமல் இருந்தனர். இதனால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பலருக்கு வீடுகள் ஒதுக்க முடியவில்லை. அவர்கள் தற்காலிக இடங்களில் தங்கியுள்ளனர். இதனால், 200 மாஜி எம்.பி.க்களும் அரசு இல்லத்தை ஒரு வாரத்துக்குள் காலி செய்யும்படியும், இல்லை என்றால், மின்சாரம், தண்ணீர், சமையல் காஸ் சப்ளையை 3 நாட்களுக்குள் துண்டிக்கவும்  மக்களவை வீட்டு வசதி குழு கடந்த 19ம் தேதி உத்தரவிட்டது. இதனால், பல மாஜி எம்.பி.க்கள் காலி செய்து விட்டனர். ஆனால், இன்னும் 82 பேர் வீட்டை காலி செய்யவில்லை. அவர்கள் மீது சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.


Tags : MPs ,Government House ,Delhi , 82 Magi MBs, occupier, law, action
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின்...