×

டிசம்பருக்குள் 50 ஆயிரம் இலக்கு நிதி ஒதுக்கீடே செய்யாமல் மரக்கன்று நடுவது எப்படி? பேரூராட்சி நிர்வாகங்கள் புலம்பல்

தேனி: மரக்கன்றுகளை நடவு செய்ய நிதி வழங்காமல், ஒவ்வொரு பேரூராட்சியும் 50 ஆயிரம் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்ற இலக்கினை மட்டும் அரசு நிர்ணயித்துள்ளதால், மாநிலம் முழுவதும் பேரூராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. தமிழகம்  முழுவதும் 528 பேரூராட்சிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு பேரூராட்சியும் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்கவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மரக்கன்றுகளை நடவு செய்ய இதுவரை நிதி வழங்கவில்லை. இதனால், பேரூராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பேரூராட்சிகளில் பணமே இல்லை.

பொதுநிதியில் இருப்பு இருந்தால் தானே செலவு செய்ய முடியும். தவிர, விலைக்கு வாங்கினால் ஒரு கன்றின் விலை மூன்று மடங்கு அதிகமாக சொல்கின்றனர். ஸ்பான்சர்களிடம் கேட்டால் மரக்கன்று 500 அல்லது ஆயிரம் மட்டுமே தருகின்றனர். ஒரு கன்று நடவு செய்து சுற்றிலும் வலை அடித்து பாதுகாப்பாக வளர்க்க 50 ரூபாய் செலவாகிறது. இப்போது அத்தனை பேரும் கன்று நடவு செய்வதால் மரக்கன்றுகளை விற்பவர்களும் விலையை உயர்த்தி விட்டனர். இதனால் ஒரு கன்று நடவு செய்து வளர்க்க 75 ரூபாய் செலவாகிறது. இதில் 50 ஆயிரம் கன்றுகள் நடவு செய்ய எத்தனை லட்சம் செலவிட வேண்டும். இதற்கு நிதியில்லாத நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும். அரசு நிதி வழங்கினால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமாகும்’’ என்கிறார்கள்.

Tags : Bereavement administrations , December, 50 Thousand Goals, Funding, Doing, Planting Wood, How? Panoramic administrations
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை