×

பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை: பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: மத்திய அரசின் 100 நாட்கள் சாதனை குறித்து விளக்க தமிழகம் முழுவதும் பிரமாண்ட யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக சார்பில் பாதயாத்திரை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினராக பாஜக மாநில துணை தலைவர் சிவகாமி பரமசிவம், மாநில செயலாளர் பொன்.வி.பாலகணபதி, மாநில செயலாளர் எஸ்.கே.வேதரத்தினம், மகளிர் அணி தலைவி ஏ.ஆர்.மஹாலட்சுமி, இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.வேதசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, கோட்ட பொறுப்பாளர் சி.தர்மராஜ், கோட்ட பொறுப்பாளர் ஜி.பாலகிருஷ்ணன், கோட்ட பொறுப்பாளர் வி.வைரவேலு, கோட்ட இணை பொறுப்பாளர் இல.கண்ணன், கோட்ட இணை பொறுப்பாளர் எம்.ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Tags : Tamil Nadu ,BJP , On behalf of the BJP, Tamilnadu, Pada Yatra, Trustees, Appointment
× RELATED தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு