×

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இது குறித்து சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்ரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாளை முன்னிட்டு 17ம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். எனவே கட்சி முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,birthday ,Periyar , Periyar's Birthday, MK Stalin, Evening Dress and Honor
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்