×

அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தேர்தல் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

சென்னை: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இருந்து புதிய தலைவர் தேர்வாகிறார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதன் முதல் கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது.
தமிழகம், புதுச்சேரி, உத்தரபிரதேசம் மாநிலங்களில் மட்டும் தேர்தல் நடந்தது. மற்ற மாநிலங்களில் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, உத்தரபிரதேசம் மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் இருந்து நிர்வாக குழு உறுப்பினர்களாக என்.பி.வேலு, எம்.ஆர்.குமாரசாமி, வி.செல்வராஜ், ஆர்.கே.பிரபாகரன், ஆர்.வான்கிளி, கே.எஸ்.கலியப்பெருமாள், ஆர்.செல்வகுமார், எம்.ஜெபதாஸ், எஸ்.யுவராஜ், வி.சென்னகேசவன், பி.முத்துசாமி, எஸ்.குமாரசாமி, ஜானகி ராமன், பி.சுந்தர்ராஜ், எம்.மாது, வி.விஸ்வநாதன் ஆகிய 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து எஸ்.சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பவர். புதிய தலைவர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த முறை புதிய தலைவர் தென்மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India Motor Transport Congress Election Announces , All India Motor Transport, Congress, Election, New Executives, List
× RELATED தஞ்சை அரசு மருத்துவமனையை சீரமைக்க ரூ.25...