இங்கிலாந்து மாஜி பிரதமர் பயன்படுத்திய தங்க ‘டாய்லெட்’ மாயம்: லண்டன் போலீஸ் விசாரணை

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டின் லண்டன் வுட்ஸ்டாக் பகுதியில் பெலன்கிம் அரண்மனை உள்ளது. இவ்விடம், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குடும்பம் வாழ்ந்த அரண்மனை. இங்கு வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தினால் செய்யப்பட்ட ‘டாய்லெட்’ கண்காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது. இந்த ‘டாய்லெட்’ யூனிட் கடந்த சில நாட்கள் முன் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த டாய்லெட் மதிப்பு ஒரு மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறப்பு போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘அருங்காட்சியகத்தில் டாய்லெட் வைக்கப்பட்டிருந்த இடத்தில் சேதம் ஏற்பட்டதுடன் தண்ணீரும் கசிவு வெளியே வந்தது. இதனையடுத்து டாய்லெட் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டது. இங்கு பணியாற்றிய 66 வயது நபர் ஒருவரும் மாயமாகியுள்ளர். கொள்ளை சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. அதனால், அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். மேலும், தங்க டாய்லெட் திருட்டு போனதால் அரண்மனையை தற்போதைக்கு அடைக்க உத்தரவிட்டுள்ளோம்’ என்றனர். லண்டனில் தங்க டாய்லெட் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : UK ,police investigation ,London , UK Prime Minister, gold toilet, magic
× RELATED கொடிக்கம்பம் ஊன்றும்போது பரிதாபம்...