×

ஆவின் பாலின் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பால் பொருட்களின் விளையும் உயர்வு: புதன் கிழமை முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு

சென்னை: ஆவின் நிறுவனம் பால் விலையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இது சாதாரண மக்களை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நெய், பால் பவுடர், பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் விலை ரூ.30 வரை உயர்த்தப்படுகிறது. மேலும் ஒரு கிலோ பால் பவுடர் விலை ரூ.50 வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு வரும் புதன் கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் பொருட்கள் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.460-ல் இருந்து ரூ.495 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவின் நெய் ஒரு லிட்டர் ரூ.35 உயர்வு கண்டுள்ளது. ஆவின் வெண்ணெய் அரை கிலோ ரூ.230-ல் இருந்து ரூ.240 ஆக உயர்வு கண்டுள்ளது. ஆவின் தயிர் 1 லிட்டர் ரூ.25-ல் இருந்து ரூ.27 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் பால்கோவா கிலோவுக்கு ரூ.20 உயர்வு கண்டுள்ளது. அதன்படி பால்கோவா 1 கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.520 ஆக விலை அதிகரித்துள்ளது. ஆவின் பன்னீர் கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. பன்னீர் 1 கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக அதிகரித்துள்ளது. பால் விலை உயர்வால், பால் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : increase , Milk products, high prices, Milk products
× RELATED வரலாற்றில் முதன் முறையாக ரூ.50,000ஐ...