×

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Tags : Thiruvananthapuram , Thundershower , Thiruvananthapuram ,days
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!