×

போராட்டக்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது; களம் இறங்க தயாராகுங்கள் : சென்னையில் மதிமுக மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தும். கலைஞருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி திமுகவுக்கு பக்கபலமாக வைகோ உள்ளார் என்று என்று சென்னையில் மதிமுக மாநில மாநாட்டை தொடக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்; மதிமுக மாநில மாநாட்டை தொடக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும்; நான் பங்கேற்கும் மதிமுக-வின் முதல் மாநாடு இது என்று தெரிவித்தார். மேலும் போராட்டக்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது; களம் இறங்க தயாராகுங்கள் என்று திமுக.தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

நாள் தோறும் போராடி போராடி தான் நம் உரிமையை பெற வேண்டி உள்ளது. தமிழகத்தில் ஒருபக்கம் கலாச்சார தாக்குதலும் மறுபக்கம் ரசாயன தாக்குதலும் நடத்தப்படுகிறது என்று கூறினார்.1949-ல் இருந்தே இந்தியை நாங்கள் எதிர்த்து வருகிறோம். நீட் நுழைவு தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகளை மத்திய அரசு சிதைத்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

ஜனநாயக குரல்


இந்தியாவே ஒருமாதிரி என்றாலும் தமிழகம் தனிமாதிரி என்பதை தேர்தலில் நாங்கள் நிரூபித்துளோம் என்று மாநாட்டில் தி.மு.க.தலைவர் ஸ்டாலின் பேசியனார். மேலும் புதுவை உட்பட 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது என்று கூறினார்.

Tags : battlefield ,MK Stalin ,conference ,DMK ,Madhimukha ,Chennai ,speech , Battlefield is being prepared; Get ready to land:
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...