×

சென்னை விமான நிலையத்தில் 2.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த மதுரையை சேர்ந்த முகமது பரூக் (32) என்பவர் உள்ளாடையில் 504 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம். இந்நிலையில், பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அப்துல் (24), நிவாஸ்கான் (28) ஆகியோர் ஆசனவாயில் 855 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.34 லட்சம்.

இதேபோல், துபாயிலிருந்து ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம்  வந்தது. அதில் வந்த கீழக்கரையை சேர்ந்த துனைட் (36), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது நசீர் (28) ஆகியோர், கருப்பு நிற பேப்பரில் 545 கிராம் எடையுள்ள தங்க செயின்களை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.21.5 லட்சம். மேலும் அவர்களிடம் உபயோகப்படுத்தப்பட்ட 24 பழைய லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட் பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.2 லட்சம்.  தொடர்ந்து, இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு  சென்னை வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த பாத்திமா நசரத்  (43) என்பவர்,  உள் ஆடையில் 375 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.14.5 லட்சம். இதுதொடர்பாக, இலங்கை பெண் உட்பட 6 பேர் கைது விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai airport , Chennai, Airport, 2.3kg, smuggling, gold
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...