×

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி

வாஷிங்டன்: அல்கொய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார். ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன், சமீபத்தில் ஆப்கனில் அமெரிக்க விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதை தலிபான்கள் மறுத்து வந்தனர். எனினும், அமெரிக்க தரப்பில் இது தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது அதிபரே அதை உறுதி செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க தீவிரவாத ஒழிப்பு படையினரால் கொல்லப்பட்டான்’’ என தெரிவித்துள்ளார். ஆனால், எப்படிப்பட்ட சூழலில் எந்த இடத்தில் ஹம்சா கொல்லப்பட்டான் என்பதை டிரம்ப் வெளியிடவில்லை. அல்கொய்தா மீடியா மூலமாக ஹம்சா கடைசியாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டான். அதில், ‘‘சவுதி அரேபியாவுக்கு எதிராக அரேபிய மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும்’’ என அவர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, கடந்த மார்ச்சில் ஹம்சாவின் சவுதி குடியுரிமையை அந்நாடு பறித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Trump ,US ,announcement ,Bin Laden , US President Trump, son of Bin Laden, killed, confirmed
× RELATED அதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி...