×

சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படியொரு பொருளாதார சரிவை சந்தித்தது இல்லை: மத்திய அரசு மீது வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படியொரு  பொருளாதார சரிவை சந்தித்தது இல்லை என்று மத்திய அரசு மீது வைகோ குற்றம்சாட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்தநாள் விழா மாநாட்டு ஏற்பாடுகளை வைகோ பார்வையிட்டார். தொடர்ந்து அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக தொடங்கியது முதலே கட் அவுட் கலாசாரம் கூடாது என்று அறிவித்தேன். காலில் விழும் கலாசாரம் கூடாது என்றேன். சுபஸ்ரீ பேனர் விழுந்து இறந்து போயிருக்கிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வித்துறையில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு முறையில் நல்ல முறையில் இருக்கிறது. தேர்வு இல்லாவிடில் மாணவர்கள் தயாராக மாட்டார்கள். தேர்வு நடக்கட்டும், அந்த விழிப்புணர்வும் வரட்டும்.

வெளிநாட்டிற்கு நமது முதல்வர் எடப்பாடி சென்றிருக்கிறார். பெருந்தொகையை அறிவித்திருக்கிறார். ஆனால், ஒரு சின்ன கேள்வி எழுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2 உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி லட்சக்கணக்கான கோடிகள் முதலீடு செய்யப்பட்டது என்று சொன்னார்கள். இதுவரை நடந்த மாநாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டார். ஆனால், உண்மையில் அவர்களால் தர முடியாது. காரணம் 5 சதவீதம் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யப்படவில்லை. எனக்கு இருக்கிற ஒரு கவலை  சந்திராயனை அணுக முடிகிறது. சந்திரயானை அணுக முடிந்த நம்மால், பொருளாதார தேக்கத்தில் இருந்து இந்தியாவை மீட்க முடியவில்லை.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால், வட மாநில இளைஞர்கள் ஏன் தமிழகத்தில் வந்து வேலைக்காக காத்துகிடக்கின்றனர். இந்தி மொழி மட்டும் வேண்டும் என்றால், இந்தி வேண்டாம் என்கிற மாநிலங்கள் இந்தியாவுடன் இருக்காது. வட கிழக்கு, கர்நாடகா, தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு இருக்கிறது. ஆங்கிலம் மட்டுமே பொது மொழியாக இருக்க வேண்டும். இந்தி திணிப்பை பற்றி கருத்து தெரிவிக்காத முதல்வர் இருக்கிறார். இது நாட்டின் சாபக்கேடு. தமிழ் பற்றியும், திராவிட இயக்கம் குறித்தும் தெரியாத முதல்வர் இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. அப்படிப்பட்ட இந்த சூழலில் தமிழகத்தை காப்பாற்றவும், திராவிட லட்சியத்தை காக்க தீர்மானங்களை திட்டமிட்டு வைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : India ,downturn ,government ,Vaiko , In the history of independent India, the economic downturn, the central government, Vaiko, the indictment
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...