×

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்கள் நலனுக்காக பாமக போராட்டம் நடத்தும்: அன்புமணி உறுதி

தர்மபுரி: தர்மபுரியில், பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், வள்ளலார் திடலில் நேற்று நடந்தது. இதில், அன்புமணி எம்பி பேசியதாவது: தமிழக நலன் சார்ந்த 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மக்களவை  தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். அவற்றில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானது. கூட்டணியில் இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் போராட்டமும் நடத்துவோம்.

வெளிநாடுகளுக்கு சென்று ரூ.8 ஆயிரம் கோடி முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்று வந்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடுகளாக வரவேண்டும். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட நாங்கள் விடமாட்டோம். சேலம்-சென்னை 8 வழிச்சாலை சுற்றுச்சூழலுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது என்று கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இத்திட்டத்தை பொருத்தவரை, சட்ட ரீதியாக, அரசியல் ரீதியாக பாமக எதிர்க்கும். தர்மபுரி மாவட்டத்தில், காவிரி மிகை நீரை பாசனத்துக்கு கொண்டு வரும் திட்டம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK , AIADMK alliance, people's welfare, love, struggle, love
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...