×

ஏற்காட்டில் திடீர் மண் சரிவு

ஏற்காடு: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்திலும் ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால், மலைப்பாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் மழைநீர் பாய்ந்து சென்றதால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. ஏற்காட்டில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் சாலையோரம் அரிப்பெடுத்து மண் சரிந்தது. சுமார் 15 அடி அகலத்திற்கு முட்டுக்கற்கள் பெயர்ந்து கிடப்பதை கண்டு நேற்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் திடுக்கிட்டனர். தகவலின்பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்கும் பணியை தொடர்ந்தனர். இருட்டி விட்டதால், இன்று காலை சீரமைப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : Soil collapse ,Yercaud , Yercaud, sudden soil, collapse
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு:...