×

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிசேரியனில் பிறந்த குழந்தை கன்னத்தில் 2 தையல்: டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிசேரியனில் பிறந்த குழந்தைக்கு கன்னத்தில் 2 தையல் போட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், ஆலங்காயம் அடுத்த பெத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன், மெக்கானிக். இவரது மனைவி தணிகைஅரசி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தணிகைஅரசி மீண்டும் கர்ப்பமானார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. சிறிதுநேரத்தில் குழந்தையை டாக்டர்கள் இளவரசன் மற்றும் உறவினர்களிடம் காண்பித்தனர். அப்போது குழந்தையின் கன்னத்தில் இரண்டு தையல்கள் போடப்பட்டு இருந்தது.

இதையடுத்து உறவினர்கள் அறுவை சிகிச்சையின்போது டாக்டர்களின் கவனக்குறைவால் பிளேடு குழந்தையின் கன்னத்தில் பட்டிருக்கலாம் ,இதனால்தான் கன்னத்தில் தையல் போட்டுள்ளனர் என்று கூறி மருத்துவ அலுவலர் செல்வகுமார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிரசவம் பார்த்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்னனர்.

Tags : Relatives ,doctors , Thiruppathur, Government Hospital, Cesarean, Newborn, Cheek 2 Sewing, Doctors, Relatives, Complaint
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை