வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுகுறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன. இங்கு விலங்குகள் தொடர்பான கல்வி, விலங்கு பரிமாற்றம், அழிநிலையில் உள்ள விலங்குகள் காப்பாற்றப்படுகிறது. இந்திய உயிரியல் பூங்காக்களுக்கு முன்மாதிரியாக வண்டலூர் பூங்கா திகழ்கிறது.

வண்டலூர் பூங்கா சர்வதேச உயிரியல் பூங்கா மற்றும் மீனகச் சங்க நிறுவனத்தின் உறுப்பினராக அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகளவில் சிறந்த தனி தளத்தை உருவாக்கவும், உலகெங்கிலும் உள்ள வன உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், தொடர்பு கொள்ளவும் உதவும். பூங்காக்களில் நிகழும் எதிர்கால வளர்ச்சி மற்றும் புதிய நெறிமுறை, கொள்கை வகுக்கவும் உதவுகிறது. உலக அளவில் நடக்கும் கருத்தரங்கில் பங்குபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: