×

10ம் வகுப்பில் மொழித்தாள்கள் ஒரே தாளாக மாற்றம் மாணவர்களின் மொழி அறிவு சிதையும்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களுக்கு ஒரே தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் மாணவர்களின் தமிழ்மொழி அறிவு சிதையும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் கூறினர். தமிழக அரசு 10ம் வகுப்புக்கு இனி ஒரே மொழித்தாள் தேர்வு இந்த கல்வியாண்டு முதலே நடத்தப்படும் என்றும் 5ம் வகுப்பு, 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது:

தமிழ் இரண்டாம் தாள் தேர்வு மூலமே மாணவர்களின் மொழி அறிவு வளர்க்கப்பட்டு வருகிறது. மொழி இலக்கணம் தொடர்பாக மாணவர்கள் கற்றுக்கொள்வது இரண்டாம் தாள் மூலம்தான். இந்த அறிவிப்பால் மாணவர்கள் தங்களின் தமிழ் இலக்கணம் தெரிந்து ஒரு சொல்லை எழுதும் வழக்கம் அற்றுப்போய்விடும். நாளடைவில் தமிழ்மொழியில் முறையாக எழுத தெரியாதவர்களாக மாணவர்களை மாற்றிவிடும். 5ம் வகுப்பு, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு தேவையற்றது.

8ம் வகுப்புக்கு ஏற்கனவே மாவட்ட அளவில் ஒரே வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, ஒரே நாளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படும். அதேபோல் குறிப்பிட்ட அரசாணையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் யாரையும் பெயில் ஆக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு யாரையும் பெயில் ஆக்க வேண்டாம் என்றால் இந்த அரசாணையே தேவையற்றது. குறிப்பிட்ட அரசாணையில் பொதுத்தேர்வு மாநில அளவில் நடைபெறுமா அல்லது மாவட்ட அளவில் நடைபெறுமா என்று தெளிவாக குறிப்பிடாமல் குழப்பியுள்ளனர். அமலுக்கு வராத மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இவ்வாறு இளமாறன் கூறினார்.

Tags : 10th Class, Language Papers, Single Page Transition, Students Language, Knowledge Disposal, Teachers Association
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...