×

15ம் ஆண்டு தொடக்கம் தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும் தமிழக வளர்ச்சிக்காகவும் பாடுபடும்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் பாடுபடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: செப்டம்பர் 14ம் தேதி (நேற்று) தேமுதிக ஆரம்பித்து 15ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது தேமுதிக. வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்றதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vijayakanth ,Tamil Nadu , Vijayakanth announces Temutika will continue to strive for people's development
× RELATED கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு...