×

சின்மயானந்தா பலாத்கார வழக்கில் 43 வீடியோ ஆதாரம் மாணவி தாக்கல்

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி, பாஜ.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவை இம்மாநில அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், சின்மயானந்தா மீதான தனது குற்றச்சாட்டுக்கு வலுவூட்டும் வகையில், பாதிக்கப்பட்ட மாணவி 43 வீடியோ ஆதாரங்களை கொண்ட பென்டிரைவை சிறப்பு விசாரணை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி கூறியதாவது: சட்டக் கல்லூரியில் சேர்ந்த பின்னர், ஒருநாள் சின்மயானந்தாவின் ஆட்கள் என்னை அவரது  வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு ஒரு அறையில் அவர் என்னுடைய குளியல் காட்சி வீடியோவை காண்பித்து, என்னை உடல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினார். இது கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இது தொடர்பான வீடியோக்கள் திவ்ய தாம் ஆசிரமத்தில் நடந்த சோதனையில் அதிகாரிகளிடம் சிக்கவில்லை. ஒருவேளை அது ஹரித்துவாரில் உள்ள ஆசிரமத்தில் இருக்குமென்று நினைக்கிறேன். இது போன்று அவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த சின்மயானந்தாவின் வழக்கறிஞர், `அந்த வீடியோவில் உள்ள காட்சி எதுவும் வற்புறுத்தலின் பேரில் நடைபெற்றதாக தெரியவில்லை. மசாஜ் செய்து கொள்வது ஒன்றும் குற்றமல்ல’ என்றார்.

Tags : student ,Chinmayana , Chinmayantha, rape case, 43 video, proof, student filing
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...