×

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற பொதுமக்கள் விவரம் வெளியீடு

கவுகாத்தி: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் பெயர்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதிப்பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சத்து 6,657 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதில், இடம் பெறாதவர்கள் வெளிநாட்டினருக்கான டிரிபியூனலை 4 மாதங்களுக்குள் தொடர்பு கொள்ளலாம் என்றும், அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், அசாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், `பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் குடும்பம் பற்றிய விவரம் ஆன்லைனில் வெளியிடப்படும்,’ என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்கள் நேற்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அசாம் மாநில என்ஆர்சி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்கள் அடிப்படையில் 3.30 கோடி விண்ணப்பதாரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும், இறுதி பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது,’’ என்றார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதை யடுத்து, அசாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 10,000 வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.

Tags : Assam National Citizens Register, Invoice, Location, Public Details, Publication
× RELATED “ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த...