×

சிறிய ஒப்பந்ததாரர்களை அழிக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பேக்கேஜ் டெண்டர் கொடுக்கும் அதிகாரிகள்

* போராட்டம் நடத்த கான்ட்ராக்டர்கள் நலச்சங்கம் முடிவு

சென்னை: பேக்கேஜ் டெண்டர் கொடுக்கும் அதிகாரிகளை  கண்டித்து கான்ட்ராக்டர்கள் நலச்சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் ₹3 லட்சத்திற்கு மேலான பணிகள் என்றால் டெண்டர் விடப்படுகிறது. அவ்வாறு விடப்படும் டெண்டரில் சிறிய ஒப்பந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு டெண்டர் எடுப்பது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்து வந்தது. இந்த நிலையில், தற்ேபாது பராமரிப்பு பணிகளுக்கு பேக்கேஜ் முறையில் டெண்டர் விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை தலைமை உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் ஆகியோரை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர்.இந்நிலையில் தொடர்ந்து பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதனால், சிறிய ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூறும் போது, தொடர்ந்து பேக்கேஜ் அடிப்படையில் டெண்டர் விடும் பட்சத்தில், போராட்டம் நடத்த கான்ட்ராக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து கான்ட்ராக்டர்கள் பொதுநலச்சந்தினர் கூறும் போது, தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் முதல் வகுப்பு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து  வகுப்புகளாக பதிவு செய்து நல்ல முறையில் பணிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பேக்கேஜ் சிஸ்டம் என்ற முறையில் கட்டிடம், மருத்துவ பணிகள்,  நீர்ஆதாரம் போன்ற பல்வேறு துறைகளில் ஒன்றிக்கு மேற்பட்ட வேலைகளை ஒன்றாக  இணைத்து டெண்டர்கள் விடப்பட்டும், டெண்டர்கள் கோரவும் உள்ளனர். ஆகவே  தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஒப்பந்ததாரர்கள் இந்த டெண்டர்களில் பங்கேற்க  முடியாமல் தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில்  சிறிய வகுப்பு 2 முதல் 4 ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்  கொண்டு இந்த பேக்கேஜ் சிஸ்டம் முறையை ரத்து செய்திடவும், சிறிய  ஒப்பந்ததாரர்கள் அனைவரும் பணிகள் பரவலாக கிடைக்கப்பெறவும் ஏற்கனவே இருந்த  பழைய நடைமுறையை தொடர்ந்து அமல்படுத்திட வேண்டும்’ என்றனர்.


Tags : companies ,contractors , Packaging tenders , corporate companies , destroy small contractors
× RELATED சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா டா..டா..!:...