×

மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு பயிற்சி

சென்னை: மின்வாரியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழக மின்சாரவாரியத்தில் அவ்வப்போது புதிதாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். அந்தவகையில், தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

இதில் எலக்ட்ரிக்கல் பிரிவில்-500, மெக்கானிக்கல் பிரிவில்-25 பேர் என மொத்தம் 525 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவற்களுக்கு மின்உற்பத்தி, விநியோகம், அனல்மின்நிலையம், நீர் மின்நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில் சென்னையில் உள்ள அனல்மின்நிலைய பயிற்சி மையத்தில் 5 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பிறகு திருவண்ணாமலை, வேலூர், மேட்டூர், திருநெல்வேலி, கொரட்டூர், கோவை, பசுமலை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பயிற்சி கொடுக்கப்படும். இந்த பயிற்சி அக்டோபர் மாதத்தில் துவங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags : Electrical Technology Assistants , Training , Electrical Technology Assistants
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...