×

வேகமாக முன்னேறுகிறது பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் வங்கதேச மிதக்கும் விவசாயம் : வறுமை ஆண்டுதோறும் குறைகிறது

துபாய்: இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான வங்கதேசம் என்றதும்  பெரும்பாலனோருக்கு நினைவுக்கும் வருவது கூட்டம் கூட்டமாக ரயில் கூரைகளில் பயணம் செய்யும் மக்களும் ,வறுமை சூழ்ந்த நிலையும் தான். ஆனால் அந்த நினைப்பை மாற்றி கொள்ள வேண்டிய நிலையை வங்கதேசம் அடைந்து வருகிறது. உலக வங்கி அறிக்கையின் படி வங்கதேசம் 2018-19 ல் 7.3 சதவிகித வளர்ச்சி விகிதத்தை பெற்று வருவதாகவும் வேகமான பொருளாதார வளர்ச்சி அடையும்  தெற்கு ஆசிய நாடுகள் பட்டியலில் வங்கதேசம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக  இடம் பெற்றுள்ளது .2007லிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 6 சதவீதம் வளர்ச்சியை பெற்று வருகிறது. வங்கதேசம் 70களில் கடுமையான இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரழந்தனர். பெரும்பாலானோர் வறுமையில் வாடினர். பின்னர் சர்வதேச நாடுகளின் பொருளாதார உதவி பெற்று பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டது. அந்நாட்டினரின் ஆயுள் காலம் அதிகரித்தல் ,குழந்தை இறப்பு குறைவு, பாலின சமத்துவம் உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

அதிக விளைச்சல் பெற்ற அரிசி மற்றும் கோதுமை அறிமுகம் செய்யப்பட்டது; இதன் மூலம் வங்கதேச விவசாயிகள் முழுவீச்சில் இறங்கி விவசாயம் செழிப்படைய தீவிரமாக இறங்கினர்; இதன் பலன், விவசாய வளர்ச்சி அதிகரித்தது. தற்போது சணல் ஏற்றுமதியில் உலகில் முதலிடத்திலும்,ஆடை ஏற்றுமதியில் இரண்டாம் இடத்திலும் வங்கதேசம் உள்ளது. மேலும் இங்கு மனித உழைப்பிற்கான  அன்றாட கூலி சர்வதேச அளவில் குறைவாக இருப்பதால் வங்கதேசத்தில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தொழிலதிபர்கள் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றனர். இயற்கை சூழ்ந்த வங்கதேசத்தின்  கிராமப்புற பகுதிகளில் 87 சதவீதம் மக்கள் விவசாயம் சார்ந்த தொழில் மூலம் வருமானம் பெறுகின்றனர். வறுமையின் விகிதம் 2016ல் 24.3 சதவீதமாக இருந்து 2018ல் 21.8 சதவீதமாக குறைந்துள்ளளது. மொத்த உள் நாட்டு உற்பத்தியில் விவசாயம் 14.23 சதவீதம் இடம் பெறுகிறது

வருடத்தில் 9 மாதங்கள் மழைபெறும் வாய்ப்பை பெற்ற அந்த நாட்டில் அவ்வப்போது வெள்ளம் சூழ்ந்து கொள்ளும்; எனவே இதனை எதிர்கொண்டு விவசாயத்தில் ஈடுபட மிதக்கும் விவசாய பண்ணைகளை உருவாக்கியுள்ளனர். இப்பண்ணைகள் மூலம் காய்கறி உற்பத்தி செய்கின்றனர். ஹையாசிந்த் என்ற மிதக்கும் தன்மை கொண்ட செடிகள் மூலம் மிதக்கும் விவசாய பண்ணைகளை உருவாக்கி அதில் விதைகளை பயிரிடுகின்றனர்.இதனால் தண்ணீர் நிறைந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலும் விவசாயம் செய்கின்றனர்.ஆண்டு தோறும் விவசாய உற்பத்தி அதிகரித்து வருகிறது
பயிர்கள், கால்நடைகள், மீன்வளம் மற்றும் வன உற்பத்தி பொருட்கள் மூலம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 47 சதவீதம் பேர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறும் என்பதற்கு வங்கதேசும் விதிவிலக்கல்ல.

Tags : Bangladesh , Fast-forward to economic growth,Bangladesh floating agriculture
× RELATED சில்லி பாயின்ட்…