×

மரக்கன்றுகளை சேதப்படுத்துவதால் போலீசாருக்கு பயந்து ஆடுகளுக்கு முகமூடி: தெலங்கானாவில் சுவாரஸ்யம்

திருமலை: தெலங்கானாவில் மரக் கன்றுகளை சேதப்படுத்துவதற்காக போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து ஆடுகளுக்கு விநோத மாஸ்க் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. தெலங்கானா மாநில அரசு `ஹரிதா ஹாரம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்க, பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரீம்நகர் மாவட்டம், ஹசிராபாத்தில் இந்த  திட்டத்தின் கீழ் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவற்றில் ராஜப்பா என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை தின்று சேதப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பினர் அந்த இரண்டு ஆடுகளை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து மரக்கன்றுகளை தின்ற ஆடுகளுக்கு தண்டனையாக இரவு முழுவதும் போலீசார் காவல் நிலையத்தின் வெளியே கட்டி வைத்தனர். இதற்கு முன்பு இதே போன்று அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு  மரக்கன்றுகளை தின்றதற்காக ஆட்டின் உரிமையாளருக்கு போலீசார் ரூ3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்த ஆடுகளின் உரிமையாளர் ஒருவர் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு பழைய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை முகமூடி போன்று மாற்றி அதை ஆட்டின் வாயில் கட்டி வைத்துள்ளார். இதனால் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது வழியில் உள்ள மரக்கன்றுகளை  ஆடுகள் தின்று விடாமல் இருக்க இப்படி செய்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

Tags : Telangana , Woodpecker, goat, mask, Telangana
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...