×

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வரும் 23-ல் ஆய்வு செய்கிறது மத்திய அரசு

டெல்லி: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வரும் 23-ஆம் தேதி மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது. பழவேற்காடு பகுதியில் கோட்டகுப்பம், லைட்அவுஸ் குப்பம், பழவேற்காடு தாங்கல், பெரும்புலம், என நான்கு ஊராட்சிகளில் 46 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரி - கடல் இணையும் பகுதியில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

குறிப்பாக தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று அந்த பகுதியில் நிரந்தர வளைவு அமைக்கக்கூடிய முயற்சியில் ஈடுபட்ட போது சுற்றுசூழல் பாதிப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்திருந்தது. மேலும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு பிறகு தமிழக அரசு மத்திய அரசிடம் முறையாக அனுமதி கோரி பழவேற்காடு ஏரி மணல் திட்டுகளை தூர்வாரி நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 23-ஆம் தேதி பழவேற்காடு முகத்துவாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை ஆய்வு நடத்துகிறது. முகத்துவாரம் மணல் திட்டுகளால் மூடிக்கிடப்பதால், மீனவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மணல் திட்டுகளை அகற்றிவிட்டு நிரந்தரமாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Puducherry ,lake estuary ,Chennai , Pulicat Lake lake estuary, bait bay, inspection, central government
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது