×

நாமக்கல்லில் புதிய முறை அமல்: இ-வேஸ்ட் குப்பையை பெற்று செல்லும் நகராட்சி ஊழியர்கள்..போன் செய்தால் போதும்

நாமக்கல்: நாமக்கல் எல்லைக்குள் வசிக்கும் கட்டிட உரிமையாளர்கள், தங்களிடம் உள்ள இ-வேஸ்ட் குப்பையை அகற்ற, நகராட்சி அலுவலர்களுக்கு போன் செய்தால் அவர்களே தங்கள் இடத்திற்கு வந்து பெற்று கொள்வார்கள். நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் 41,083 உள்ளது. இந்த கட்டிடங்களில் இருந்து 21 டன் மக்கும் குப்பையும், 14 டன் மக்காத குப்பையும், 13 டன் விற்பனை செய்யக் கூடிய குப்பைகள், விற்பனைக்கு உதவாத குப்பை என நாள்தோறும் 38 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பைகைளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நாள்தோறும் பெற்று வருகின்றனர். சேகரிக்கப்படும் குப்பை தனித்தனியாக பிரிக்கப்பட்டு, கொசவம்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்களில் கொட்டப்படுகிறது. இவற்றை ரகம் வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.

பயன்படுத்த முடியாத டிவி, பிரிட்ஜ், கம்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் இ-வேஸ்ட் எனப்படுகிறது. இந்த குப்பையை வழக்கமாக குப்பை வாங்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கக் கூடாது. இந்த இ-வேஸ்ட் குப்பையை பெற துப்புரவு அலுவலர், உதவி துப்புரவு அலுலவர் மற்றும் களப்பணி உதவியாளர் ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கென 9894807886, 9994588224, 8122440699 ஆகிய செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் தொடர்பு கொண்டால் இந்த அலுவலர்களே இ-வேஸ்ட் குப்பை உள்ள இடங்களை தேடி வந்து பெற்று செல்கின்றனர். தற்போது இந்த வசதியை நாமக்கல் நகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, நாமக்கல் நகராட்சி எல்லைக்குள் கட்டிட உரிமையாளர்கள், தங்களிடம் உள்ள இ-வேஸ்ட் குப்பையை சம்பந்தப்பட்ட அலுவலர்களின் எண்களுக்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்துள்ளார்.

Tags : Namakkal, e-waste, municipal employees
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...