×

கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்: பள்ளத்தூரில் தொடரும் தண்ணீர் திருட்டு..ஒரு வருடமாக தொடரும் பிரச்னை

காரைக்குடி: பள்ளத்தூர் அமுமு ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதியில் ேமாட்டார் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் ஒரு வருடமாக  அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்மறியல் செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர். காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேருராட்சி 14வது வார்டுக்கு உட்பட்டது அமுமு ஆஸ்பத்தி குடியிருப்பு. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 1500க்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனர். இக்குடியிருப்பில் 3 வீதிகள் உள்ளன. மக்களின் தண்ணீர் தேவைக்கு என இப்பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு போர் போடப்பட்டு 30 ஆயிரம் கொள்ளவு உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைத்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட வீட்டு இணைப்புகளும், 12க்கும் மேற்பட்ட பொது பைப்பும் உள்ளது. இந்த தண்ணீரை தான் மக்கள் குடிக்க, குளிக்க மற்ற அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த போரில் இருந்து மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் இப்பகுதியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தண்ணீர் மோட்டார் வைத்து திருட்டுத்தனமாக எடுப்பதால் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தண்ணீர் அவ்வப்போது வருவதும், சில நாட்கள் முற்றிலும் வராத நிலை ஏற்பட்டுள்ளது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெள்ளைச்சாமி கூறுகையில், `` கடந்த 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக எங்கள் பட்டா இடத்தை அரசுக்கு வழங்கினோம். அதில் போர் போட்டு டேங்க் கட்டியுள்ளனர். எங்கள் குடியிருப்பு மக்களுக்கு தெரியாமலேயே மற்ற பகுதிகளுக்கு தற்போது தண்ணீர் கொண்டு செல்கின்றனர். அங்கு மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு தண்ணீர் வரத்து ஒரு வருடமாக முற்றிலும் குறைந்து விட்டது. எங்களின் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் இல்லை. பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பெயரளவில் பைப் லைன்களை வேலைபார்த்து வருகின்றனர்’’ என்றார்.
இதுகுறித்து வெள்ளையம்மாள் கூறுகையில், `` தண்ணீர் இல்லாததால் ஊர் திருவிழாவுக்கு கூட உறவினர்களை அழைக்க முடியாத நிலை உள்ளது. தேவைக்கு கூட தண்ணீர் இல்லை. கேட்டால் மேடான பகுதியாக உள்ளது என அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். 12 வருடமாக தண்ணீர் நன்றாக வந்தநிலையில் தண்ணீர் திருடப்படுவதால் திடீர் என வரவில்லை. வசதி படைத்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் தான் அதிகாரிகள் அக்கறை காட்டுகின்றனர். அவர்கள் மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதையும் கண்டு கொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு ஒருவருடமாக தண்ணீர் வரவில்லை.  இதேநிலை நீடித்தால் மக்களை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவோம்’’ என்றார்.

Tags : valley , Panorapatti, palayathoor, water theft, problem
× RELATED கம்பம் பள்ளத்தாக்கில் வயல்வெளியில்...