×

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு நடவடிக்கை: நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன... நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொருளாதார மந்தநிலையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏற்றுமதி மற்றும் வீடுகளுக்கான வரிச்சலுகை பற்றி டெல்லியில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.

* நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக தெரிகின்றன.

* நாட்டின் பணவீக்க விகிதம் 4 சதவீதத்துக்கு கீழ் உள்ளது. நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பும் போதுமான அளவு உள்ளது. 5 முக்கிய துறைகளில் பொருட்கள்நுகர்வு குறைந்து விட்டது. செப்டம்பர் 19-ம் தேதி பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

ஏற்றுமதியை அதிகரிக்க அரசு நடவடிக்கை

* நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

* வரி செலுத்தும் முறையில் சிறிய தவறுகள் ஏற்பட்டால் அதற்கான தண்டனை ஏதும் வழங்கப்படாது.

* நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மூலம் ரூ.68,000 கோடி கடன் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* வங்கியில் கடன் வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்படும்.

* நாட்டின் ஏற்றுமதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

* கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை திரும்ப வழங்கும் முறை மின்னணு மயமாக்கப்படும்.

* நாட்டின் ஏற்றுமதி வரியில் இதுவரை நடைமுறையில் உள்ள சுங்க வரியை 2020 ஜனவரி 1 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளார்.

* சுங்க வரி நீக்குவதால் ஜவுளி வியாபாரிகள் பெரியளவில் பயனடைவார்கள். 2020 ஜனவரி 1 முதல் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய புதிய திட்டம் நடைமுறைக்கு வரும். புதிய திட்டத்தால் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

* துபாயில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஷாப்பிங் திருவிழா போல் இந்தியாவிலும் மார்ச் மாதம் நடத்தப்படும். ஜவுளி, தோல், சுற்றுலா, யோகா தொடர்பாக ஷாப்பிங் திருவிழா அமையும்.

* கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்ய நாடு முழுவதும் கைவினைஞர்கள் பெயர் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Government ,recovery ,country , Export, Government, Economy of the Country, Nirmala Sitharaman
× RELATED நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி...