×

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ - வின் தந்தையுமான பி.என்.யுகாந்தர் காலமானார்.

ஹைட்ரபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைட்ரபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் பி.என்.யுகாந்தர் , 80 வயதான இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியதோடு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை கவனித்துள்ளார். இவரது மகன் சத்யா நாதுல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ - வாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்  பி.என்.யுகாந்தர் நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.

பி.என்.யுகாந்தர் மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு , அந்ந மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பல்வேறு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் மறைந்த பி.என்.யுகாந்தர் எளிமையின் அடையாளம் என்றும் உண்மை மற்றும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என்றும் அந்ந மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.


Tags : IAS officer ,BN Yukander ,Microsoft , Former IAS officer, BN Yukander, passed away
× RELATED ஐஏஎஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை