×

திண்டுக்கல் மாணவர் மீண்டும் உலகசாதனை ஆணிப்படுக்கையில் அமர்ந்து 24 மணிநேரம் பத்மாசனம்

திண்டுக்கல் : ஆணி படுக்கையில் தொடர்ந்து 24 மணிநேரம் பத்மாசனம் செய்து திண்டுக்கல் மாணவர் மீண்டும் உலக சாதனை படைத்தார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் தீபக்குமார். ஜிடிஎன் கல்லூரியில் பிஎஸ்சி உடற்கல்வி 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக யோகாசனம் செய்து வரும் இவர் உலக சாதனை படைக்க எண்ணினார். இதற்காக கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் 1,500 ஆணிகள் கொண்ட படுக்கையில் தீபக்குமார் நேற்று முன்தினம் காலை 10.30 மணி முதல் நேற்று காலை 10.30 மணி வரை தொடர்ந்து 24 மணிநேரம் அமர்ந்து பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்தார்.

இதற்கான சான்றிதழை குளோபல் நிறுவனத்தை சேர்ந்த அரவிந்த், திண்டுக்கல் மாவட்ட யோகா சங்க தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து இவரது சாதனை குளோபல் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் துரை, முதல்வர் பாலகுருசாமி, யோகா சங்க செயலாளர் நித்யா, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தீபக்குமார் நேற்று முன்தினம் 1,500 ஆணிகள் கொண்ட படுக்கையில் 32 நிமிடங்கள் 40 வினாடிகளில் 100 யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : student ,Dindigul ,World Order , Lotus position ,Dindigul ,World Record,Yoga
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்