×

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. அரியலூர், செந்துறை, வாரணமாசி உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லுபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடும் வெயிலுக்கு இடையே பரவலான இடங்களில் நேற்று திடீரென கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று சுமார் அரைமணி நேரம் மழை பெய்தது. இதேபோல் நாகை மாவட்டம் சீர்காழி, கும்பகோணம், பாபநாசம் , திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


Tags : Thundershowers ,Thiruvananthapuram , Ariyalur, moderate rain, chance, Chennai weather
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...