×

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் தான் உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும்; அமித் ஷா

புதுடெல்லி: இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவில் அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தி தினத்தை முன்னிட்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். பல மொழிகளை கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனி முக்கியத்துவம் உண்டு என்றும் மக்கள் தங்கள் தாய் மொழியுடன் இந்தியையும் பயில வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற கொள்கையை வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரே நாடு ஒரே ஒரே மொழி என்ற கொள்கையை பரப்பும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு பல முயற்சி செய்து தமிழகத்தில் இந்தியை நுழைக்க பார்க்கிறதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எப்பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட முடியாதா என மத்திய அரசு முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

சுப.வீரபாண்டியன் எதிர்ப்பு

அமித்ஷாவின் இந்த கருத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டுக்கும எதிராக அமித்ஷாவின் கருத்து உள்ளதாக சுப.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி கண்டனம்

இந்தியாவில் அங்கிகரீக்கப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளில் இந்தியும் ஒன்று தான் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆட்சி பலத்தை வைத்துக்கொண்டு இந்தி மொழியை மோடி அரசு திணிக்க முயல்வதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முத்தரசன் கண்டனம்

ஒரே நாடு ஒரே மொழி என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



Tags : India ,Amit Shah , India, Hindi, Language, Language Problem, Hindi Language, Home Minister, Amit Shah
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...