×

அமெரிக்க வாழ் இந்தியரை கடத்தி பணம், ஏடிஎம் கார்டு பறிப்பு : கால் டாக்சி டிரைவர் கைது

சென்னை: தி.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா (52). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பணிக்காரணமாக அமெரிக்காவில் நிரந்திர குடியுரிமையுடன் குடியேறினார். இவரது தந்தை உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த 7ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். கிருஷ்ணா, கடந்த 10ம் தேதி இரவு 11 மணி அளவில் தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மது அருந்திவிட்டு நடந்தே வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது காரில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல் நடித்து, கிருஷ்ணாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த 3 பேர் கிருஷ்ணாவை கடுமையாக தாக்கி அவரின் ஏடிஎம் கார்டு மூலம் தாம்பரம் அருகே உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்க முயன்றனர். அமெரிக்கா வங்கி ஏடிஎம் கார்டு என்பதால் சென்னையில் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் கிருஷ்ணாவை மீண்டும் உதைத்து அவர் வைத்திருந்த 600, அமெரிக்கா நிரந்தர குடியுரிமைக்கான பச்சை நிற கார்டு, ஏடிஎம் கார்டுகள், 2 விலை உயர்ந்த செல்போன்களை பிடிங்கி கொண்டு காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கிருஷ்ணா சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வடக்கு போக் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று கடத்திய காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் நாகராஜன் (34) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கிருஷ்ணாவை கடத்தி, பணம் பறித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது  செய்தனர். கடத்தலுக்காக பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.அம்பத்தூர்: அம்பத்தூரில் டாக்டர் தம்பதி வீட்டை உடைத்து 30 சவரன் நகை, 2லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பாடி கோல்டன் காலனி 4வது தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி லீனா நாயர் (61) என்பவரது வீட்டை உடைத்து 20 சவரன் நகை, 5000 ரொக்கத்தை கொள்ளையடித்த கொளத்தூர்,  ஜி.கே.எம் காலனி, ஜம்புலிங்கம் மெயின் ரோட்டை சேர்ந்த மாணிக்கராஜ் (36),  அயனாவரம், கமிஷனர் காலனியை சேர்ந்த ஹரிஹரன் (29), பாண்டிச்சேரி, காரைக்கால்  பகுதியை சேர்ந்த முகமது ஜாஸ்மின் அரபாத் (24) அம்பத்தூர், கள்ளிக்குப்பம்,  முத்தமிழ் நகர், விநாயகர் கோயில் தெருவைச் சார்ந்த அங்குராஜ் (38) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 50 சவரன் நகைகள், கார். ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் அவர்கள் 4 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Indian ,taxi driver , Indian taxi driver arrested , abducting money, ATM card
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...