×

கொளத்தூரில் பயங்கரம் பெயின்டர் கொலை : சிறுவனிடம் விசாரணை

புழல் : சென்னை கொளத்தூர், தெற்கு மாடவீதி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (45). பெயின்டர். கடந்த 11ம் தேதி இரவு பாஸ்கர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் அருகே நடந்து வந்தபோது அவ்வழியாக வந்த 5 பேர் கும்பல் திடீரென பாஸ்கரை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பாஸ்கரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை நேற்று ராஜமங்கலம் போலீசார் பிடித்தனர். அவனிடம் கொலைக்கான காரணம் என்ன? உடன் இருந்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மாணவனுக்கு வெட்டு:  அமைந்தகரை சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்த வசந்தகுமார் (18), வேப்பேரியில் உள்ள கல்வி நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மது போதையில் வந்த மர்ம கும்பல், வசந்த்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அமைந்தகரை சுண்ணாம்பு கால்வாய் சேர்ந்த கருணாகரன் (32), ஆனந்த் (31) ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Painter Murder, Kolathur, Investigation
× RELATED மேடவாக்கத்தில் பயங்கரம் லோடு வேன்...