×

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - தாம்பரம் இடையே ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை மற்றும் செப்டம்பர் 22ம் தேதி ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது, என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நாளை மற்றும் செப்டம்பர் 22ம் தேதி ஆகிய நாட்களில் காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40, 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேப்போல், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35, 12, 12.15, 12.45, 1,30, 1.45, 2.15, 2.30, 3, 3.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, அரக்கோணம், காஞ்சிபுரம், திருமால்பூர் இடையே நாளை மற்றும் செப்டம்பர் 22ம் ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1.05 மணி வரை இயக்கப்படும் 15 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து நாளை மற்றும் 22ம் தேதி காலை 10.55, 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், திருமால்பூரில் இருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கும், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 11.10, 11.45, 12.25, 1.35, 2, 2.35 ஆகிய நேரங்களிலும், சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.30 மணிக்கு தாம்பரத்திற்கும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.55 மணிக்கு அரக்கோணத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேளச்சேரி வழித்தடம்

சென்னை கடற்கரையில் இருந்து நாளை (15ம் தேதி)  காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20,  11.40, 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து  செய்யப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்.

அதேப்போல்,  வேளச்சேரியில் இருந்து காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10,  11.30, 11.50, 12.10, 12.30, 12.50, 1.10, 1.30 மற்றும் 1.50 ஆகிய நேரங்களில் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படம் மின்சார ரயில்கள்  ரத்து செய்யப்படுகிறது. பிற்பகல்  2.10 மணி முதல் வேளச்சேரி- சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும்.

Tags : cancellation ,Southern Railway , Southern Railway announces ,cancellation of trains , maintenance work
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...