×

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

பெரம்பூர்: சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு, ஜிக்னேஷ் என்பவர்  நகைப் பெட்டி தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு 15க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த கடையில் நேற்று மாலை திடீர் என தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : fire , Sudden fire , business premises
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...