×

ரத்தம் சொட்டச்சொட்ட ரயிலின் கூரை மீது ஏறி நின்று கூச்சலிட்ட போதை வாலிபர்

சென்னை: எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு 9.40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது, 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வயிறு, கழுத்து பகுதிகளில் ரத்தம் வழிந்த நிலையில் ரயிலின் மேற்கூரையில் ஏறி நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். மேலும், உயர் அழுத்த மின்சார கம்பியையும் தொடுவதற்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து, ரயில்வே போலீசார் அந்த இளைஞரை சமாதானப்படுத்தும் வகையில் பேசி கீழே இறக்கினர். அப்போது, இளைஞர் மதுபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிறகு அவருக்கு ரயில் நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், மாதவரத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி கணேசன் எனவும், தன்னை கொலை செய்ய 50 பேர் விரட்டி வந்தனர் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து, சிகிச்சை முடிந்தவுடன் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Tags : roof , A drug addict shouting , roof of the train
× RELATED டெல்லியில் மத்திய நிதியமைச்சக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!!!